Tuesday 27 May 2014

ஜோதிடம் வரலாறு

எந்த ஒரு கலைக்கும் வரலாறு என்பது அடிப்படை ஆணிவேராகும், ஜோதிடவியலின் வரலாற்றை அறிந்து கொள்வதால், பழங்கால மானுடர்களுக்கு இக்கலை எவ்வாறு உதவியிருக்கிறது என்றும், மேலும் ஜோதிட வளர்ச்சிக்காக பாடுபட்ட நம் முன்னோர்களைப்பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் பலன்கூறும் முறையானது தனி மனிதனுக்காக இல்லாமல், நாடுகளுக்குப் பார்க்கப்பட்டன. அதாவது தாங்கள் வாழும் பகுதியில் விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பது போன்று பலன் பார்க்கும் முறை இருந்தது.

அதன் பின்னர் பல வருட வானசாத்திர ஆய்வின் மூலமாக, நாட்டின் அரசர்களுக்கு ஜோதிட பலன்கள் பார்க்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை விண்ணில் உள்ள நட்ச்சத்திர மண்டலங்களை இங்குள்ள அரசர்களின் குலத்திற்குப் பிரித்து, அதற்க்கு கோச்சார ரீதியாகப் பலன்கள் சொல்லப்பட்டு வந்தன.

நாட்டின் அரச குலத்திற்குப் பாக்கப்பட்டு வந்த ஜோதிடம்  சாத்திர வளர்ச்சியினால் ராசி மண்டலம் பிரிக்கப்பட்டு, தனி மனிதனுக்கு ஜாதகம் கணித்து எதிகால பலன்கள் பார்க்கப் படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. 

தற்பொழுது ராசியை மைய்யப் படுத்தி பார்க்கும் ஜோதிட பலன்கள் குறைந்து, பன்னிரு பாவகப்படியும், கோள்களின் வலிமையைத் துல்லியமாக கணித்தும், விம்சோத்தரி தசா முறைப்படி பலன்கள் சொல்லப்படுகின்றது.



No comments:

Post a Comment