Tuesday 2 December 2014

சனிப்பெயர்ச்சி 2014




சனிப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கம் 2-11-2014,
 வாக்கியப் பஞ்சாங்கம் 16-12-2014

சனி பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள் : மிதுனம், கன்னி, மகரம்.

அசுபப்பலனை எதிர் கொள்ளும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம்.

மேஷம்: அஷ்டமசனி
ரிஷபம்: கண்டசனி
சிம்மம்: அர்த்தாஷ்டமசனி
துலாம்,விருச்சிகம்,தனுசு: ஏழரைசனி
கும்பம்:ஜீவனசனி

மேலும் ஏழரைச் சனி ஒருவரது வாழ்வில் பொதுவாக மூன்று முறை வரும். அதில் முதல் முறை வருவது மங்கு சனி எனப்படும், இரண்டாம் முறை வருவதை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை வருவதை மரணச்சனி என்பர். எனவே இரண்டாம் முறையாக ஏழரை சனியை அனுபவிக்க இருப்பவர்கள் அதிக கவலைப்படத் தேவையில்லை. சிலருக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், வீடு கட்டுதல் போன்ற நீண்டநாள் கனவுகள் இந்தக் கால கட்டத்தில் நடைபெற வாய்ப்புண்டு. மற்றவர்களுக்கு, அவரவர் சுயஜாதகத்தில், தசாபுத்தியின் அடிப்படையில் சிரமங்கள் குறையும்.


பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு  எள் தீபம் ஏற்றுவது நன்மை தரும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். மேலும் திருநள்ளாறு போன்ற கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். ஐயப்பனையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால் சனி தோஷம் விலகி நன்மை ஏற்படும்.


மேஷ ராசி: இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்டங்களையும், நஷ்டங்களை தந்த சனிபகவான் இப்போது எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். தோல்வி மனப்பான்மை தலைத்தூக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விபத்துகள் ஏற்படக்கூடும். வரவுக்குமேல் செலவுகள் ஏற்படும், மனைவி வழி உறவினர்களுடன் பிரச்சினைகள் வரும்.

Tuesday 8 July 2014

ராகு கேது தோஷம்


செவ்வாய் தோஷம் போல் தற்காலத்தில் ஜோதிடர்களால் மிகைப்படுத்திக் கூறப்படும் ஒரு தோஷமே ராகு கேது தோஷமாகும், பொது விதிகளை விட்டு விடுவோம், ஆய்வு ரீதியாகப் பார்க்கும் பொழுது 

Wednesday 2 July 2014

குறைந்த மதிப்பெண்ணா?


கோசாரம் என்ற சொல்லுக்கு கோள்களின் அசைதல் என்பது பொருளாகும், கோள்களின் சஞ்சாரத்தினால் ஒரு ராசிக்கு ஏற்படக்கூடிய பலன்களையே கோசாரப் பலன் என்கிறோம்.
ஒருவருடைய வருங்காலப் பலன்களைப் பற்றிக் கூறவேண்டும் என்றால்